தெஹிவளையிலும் குண்டு வெடிப்பு! இருவர் பலி!! – பலர் காயம்

தெஹிவளையிலும் இன்று (21) பகல் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகிலுள்ள ஹோட்டலொன்றிலேயே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது . பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து தெஹிவளை மிருகக்காட்சிசாலையும் மூடப்பட்டுள்ளது.

கொழும்பு, மட்டக்களப்பு, நீர்க்கொழும்பு ஆகிய பகுதிகளில் இன்று காலை 6 இடங்களில் குண்டுகள் வெடித்திருந்த நிலையிலேயே பகல் தெஹிவளையிலும் வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

தெஹிவளையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *