தொடர் குண்டுவெடிப்புகள்: 7 பேர் கைது; 200 இற்கும் மேற்பட்டோர் பலி!

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் இன்று மாலைவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

இவர்களில் சிலர் தற்கொலை தாக்குதலுக்கு வந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையிலும் இறங்கியுள்ளனர்.

8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளனர். 400 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, அனைத்து பல்கலைக்கழகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *