உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிப்பு! – சந்திமால், தரங்க, திக்வெல்ல, குணதிலக நீக்கம்

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி வீர்ரகளான தினேஷ் சந்திமால், உபுல் தரங்க, நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதியிலிருந்து ஜூலை 14ஆம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன நேற்று நியமிக்கப்பட்டார். அவரது முதலாவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இதுவாகும்.

இந்தநிலையில் இலங்கை அணியின் விபரம் இன்று நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் விபரம் வருமாறு:-

திமுத் கருணாரத்ன (அணித் தலைவர்), லசித் மாலிங்க, அஞ்சலோ மத்யூஸ், திசார பெரேரா, குசல் ஜெனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, குசல் மென்டிஸ், இசுறு உதான, மிலிந்த சிறிவர்த்தன, அவிஷ்க பெர்னாண்டோ, ஜீவன் மென்டிஸ், லஹிரு திரிமான்ன, ஜெப்ரி வென்டர்சே, நுவான் பிரதீப் மற்றும் சுரங்க லக்மால்.

ஓசத பெர்னாண்டோ, அஞ்சலோ பெரேரா, கசுன் ரஜித, வணிந்து ஹசரங்க ஆகியோர் மேலதிக வீரர்களாக அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *