கல்வித்துறை குறித்த தீர்மானங்களை அரசியல் வாதிகள் எடுக்ககூடாது!

நாட்டின் கல்வித்துறை பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ளும் பொறுப்பினை அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்காது, அதனை நாட்டின் கல்வித்துறை சார்ந்த புத்திஜீவிகளும் கல்விமான்களும் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி   தெரிவித்தார்.’

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக இன்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று பிள்ளைகளின் கல்வியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென தெரிவித்தார்.

” பிரபல பாடசாலைகள் இலக்குடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படுத்தப்பட்டுள்ள போட்டித்தன்மை எமது நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு சிறந்ததல்ல. இந்நிலைமை பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி விரைவில் மாற்றப்பட வேண்டும்.

பிரபல பாடசாலைகள் மற்றும் சிறந்த பாடசாலைகள் போன்ற எண்ணக்கருக்களால் இன்று எமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளில் பாரியளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

முறையான கல்வித்திட்டத்தின் ஊடாக சகல பாடசாலைகளையும் சிறந்த பாடசாலைகளாக மாற்றி அனைத்து பிள்ளைகளுக்கும் சம கல்வி உரிமையை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும்.

பிரபல பாடசாலைகள் எண்ணக்கருவினால் பெருமளவிலான மாணவர்கள் கொழும்பு நகர பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவதனால் கொழும்பு நகரத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி இல்லாதுபோகும் அசாதாரணமான சூழல் உருவாகியுள்ளது. ;; என்றும் கூறினார்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்து, அதற்காக முன்வைக்கப்படும் மாற்று செயற்திட்டம் தொடர்பில் இதன்போது கல்வியியலாளர்கள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கல்வித்துறைசார் நிபுணர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *