ஆண் மலைப்பாம்பை தூதுவிட்டு பெண் மலைப்பாம்பை பிடித்த விஞ்ஞானிகள்!

அமெரிக்காவில் ஆண் மலைப்பாம்பு உதவியுடன் 17 அடி நீளம் கொண்ட பெண் மலைப்பாம்பை விஞ்ஞானிகள் பிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தில், ஆண் மலைப்பாம்பு உதவியுடன் 17 அடி நீளம் (5.2 மீட்டர்) கொண்ட பெண் மலைப்பாம்பு ஒன்றை விஞ்ஞானிகள் பிடித்துள்ளனர்.
பிக் சைப்ரஸ் தேசிய வனப்பகுதியில், பறவை, முயல் உள்பட சிறிய வகை விலங்குகள் அடிக்கடி காணாமல் போனது.
இதையடுத்து பெண் மலைப்பாம்பு ஒன்று இந்த விலங்குகளை வேட்டையாடி வருவதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் விஞ்ஞானிகள் உதவியுடன் மலைப்பாம்பை பிடிக்க திட்டமிட்டனர்.
அதன்படி ஆண் மலைப்பாம்பு ஒன்றின் மீது ரேடியோ ட்ரேன்ஸ்மீட்டரை பொறுத்தி வனப்பகுதியில் விடப்பட்டது. அது பெண் மலைப்பாம்பு இருக்கும் இடத்தை நோக்கி சென்றது.
இதையடுத்து ஆண் மலைப்பாம்பை பின்தொடர்ந்த விஞ்ஞானிகள் ஒரு பெண் மலைப்பாம்புவையும் அதன் 73 முட்டைகளையும் கைப்பற்றினர். பிடிபட்ட 17 அடி நீள மலைப்பாம்புடன் விஞ்ஞானிகள் 4 பேர் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த மலைப்பாம்பு ஒரு கட்டடத்தின் உயரமும் 64 கிலோகிராம் எடையும் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாகாணத்தில் சிக்கிய மிகப்பெரிய மலைப்பாம்புகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *