சிக்ஸர் மழைபொழியும் ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல்!

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடினார். அவர் 47 பந்தில் 79 ஓட்டங்களை எடுத்தார். இதில் 8 பவுண்டரியுடன் 4 சிக்சர்களும் அடங்கும்.

இந்த நான்கு சிக்சர்களுடன் கெய்லின் சிக்ஸ் எண்ணிக்கை ஐபிஎல் டி20 லீக்கில் 296 ஆக உயர்ந்துள்ளது.

300 சிக்சர்களை நெருங்க இன்னும் 4 சிக்சர்களே தேவை. அடுத்த ஆட்டத்தில் கெய்ல் 300 சிக்சர்கள் அடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கெய்லுக்கு அடுத்தப்படியாக டி வில்லியர்ஸ் 187 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், டோனி 186 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *