ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்! – சாதனைத் துளிகள்

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா(T-20) இன்று (23) முதல் களைகட்டவுள்ளது. முதல் போட்டியில்  சென்னை சுப்பர் கிங்க்ஸ், ரோயல் சேலேஞ்சர்ஸ் ஆகிய அணிகள் களம் காண்கின்றன.

சென்னை, எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில்  இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.  இறுதி ஆட்டமும் (பைனல் மெட்ச்)  இதே ஆடுகளத்தில்தான் நடைபெறவுள்ளது.

2008 ஆம் ஆண்டில்தான் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் தொடரே கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இம்முறை ( 2019) நடப்பது 12 ஆவது தொடராகும். 8 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐ.பி.எல். முதலாவது தொடரில் ( 2008) ராஜஸ்தான் றோயல்ஸ் அணி வெற்றிவாகைசூடியது.  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இரண்டாம் இடத்தை பெற்றது.

2018 இல் நடைபெற்ற 11 ஆவது தொடரில் வெற்றிக்கனியை ருசித்து நடப்பு சாம்பியனாக வலம் வருகின்றது சென்னை சூப்பர் கிங்கஸ்.

(இதுவரை வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்துள்ள அணிகள் விபரத்தை அறிய…..)https://en.wikipedia.org/wiki/List_of_Indian_Premier_League_seasons_and_results

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் சாதனைத் துளிகள்……

* ஐ.பி.எல்.  வரலாற்றில் இதுவரை ( 2018 – 2018) 52 சதங்கள் விளாசப்பட்டுள்ளன. 2008 இல் முதல் சதத்தை கொல்கத்தா அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரர் பிரன்டன் மெக்கலம் அடித்தார்.

அதிகபட்சமாக கொல்கத்தா, பெங்களூரு அணிக்காக விளையாடி தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப்பில் ஐக்கியமாகியுள்ள கிறிஸ் கெய்ல் 6 சதங்கள் அடித்துள்ளார். இதில் அவர் 30 பந்துகளில் மின்னல்வேகத்தில் அடித்த சதமும் அடங்கும்.

அதிக சிக்ஸர்களை அடித்த வீரராகவும் திகழ்கின்றார். 111 போட்டிகளில் 262 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

https://en.wikipedia.org/wiki/List_of_Indian_Premier_League_centuries

* முப்பை இந்தியன்ஸ் அணியே அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த அணியாக வலம் வருகின்றது.  இதுவரையில் 171 போட்டிகளில் விளையாடி 97 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது.

* அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணி பெங்களூர் ரோயல்ஸ் சேஜேன்ஸர்ஸ். 2013 இல் நடைபெற்ற போட்டியில் புனே வாரியஸ் அணிக்கு எதிராக 263 ஓடங்களை குவித்தது. ( 263 /5)

* ஐ.பி.எல். தொடரில் குறைவான ஓட்டங்களையும் பெங்களூர்  அணியே பெற்றுள்ளது. 2017 இல் நடைபெற்ற போட்டியில் 49 ஓட்டங்கள்.

* Highest successful run chases – அதிகூடிய ஓட்டஇலக்கை துரத்தியடித்து வெற்றிபெற்ற அணி ராஜஸ்தான் ரோயல்ஸ். 217 -7 ( 2008.)

* Largest victories (by runs) அதிகூடிய ஓட்டங்களால் வெற்றிபெற்ற அணி முப்பை இந்தியன்ஸ். 146 ஓட்டங்கள்.

* ஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர் சுரேஸ் ரெய்னா. 172 போட்டிகளில் 4 ஆயிரத்து 985 ஓட்டங்களை குவித்துள்ளார்.

*  அதிக ‘மெய்டன்’(ஓட்டமற்ற) ஓவர்கள் வீசியதில் பிரவின் குமார்முதலிடம் வகிக்கிறார். 119 ஆட்டத்தில் ஆடி 420.4 ஓவர்கள் பந்து வீசியுள்ள அவர் அவற்றில் 14 ஓவர்களில் ஓட்டம் ஏதும் விட்டுக்கொடுக்காமல் மெய்டனாக்கி இருக்கிறார்.

அதிகமான ‘டாட்’ பந்துகளை (பேட்ஸ்மேன் ரன் எடுக்காமல் விரயமாக்கிய பந்து) வீசிய பெருமையை முன்பு மும்பை அணியில் ஆடி இப்போது சென்னை சூப்பர் கிங்சுக்காக களம் காணும் ஹர்பஜன்சிங் கொண்டுள்ளார்.

அவர் 149 ஆட்டங்களில் 518.2 ஓவர்கள் பவுலிங் செய்து அதில் 1,128 பந்துகளில் ரன் ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை. அதே சமயம் அதிக முறை ‘டக்-அவுட்’ ஆன மோசமான சாதனையும் அவரது வசமே உள்ளது. ஹர்பஜன்சிங் 13 முறை ரன்னின்றி வீழ்ந்துள்ளார்.

* ஐ.பி.எல்.-ல் 17 முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளன. டெக்கான், டெல்லி, ஐதராபாத் அணிக்காக ஆடிய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா அதிகபட்சமாக 3 முறை ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்த்து இருக்கிறார்.

யுவராஜ்சிங் 2 முறை இச்சாதனையை செய்திருக்கிறார். தமிழக வீரர் பாலாஜிதான் முதல் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார். (2008)

* அதிக பிடி எடுப்புகளை எடுத்த வீரர் சுரேஸ் ரெய்னா ( 95) Most catches (fielder)

https://en.wikipedia.org/wiki/List_of_Indian_Premier_League_records_and_statistics

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *