வெடித்துச் சிதறிய விமானம்; உலகை உலுக்கியது சோகம்…!

நடுவானில் நட்டான்தரையில் தத்தளிக்கும் போது என்னதான் செய்வது என்ற நிலைமை யாராலும் சிந்திக்கக்கூட முடியாத ஒரு பரிதவிப்பு நேரமாகிவிடும். உயிரின் விளைவு விதியிலுத்த வெகுமதியாக கண்முன்னே தோன்ற உயிரைக் காப்பாற்ற வழியில்லாமல் தத்தளிக்கும் நிலைமையை அனுபவமாய்ச் சொல்வதற்கும் யாரும் எஞ்சாத அவலம்.

கடந்த 10 ஆம் திகதி (2019.03.10) எதியோபிய அடிஸ் அபாவிலிருந்து கென்யாவின் நைரோபியை நோக்கிச் சென்ற “போயிங் – 737 மெக்ஸ்’ ரக விமானம் இடைநடுவில்; விபத்துக்குள்ளாகி 157 உயிர்கள் காவுகொள்ளப்பட்ட சம்பவம் முழு உலகையுமே அனுதாபத்தில் கண்ணீர் மிளிர வைத்தது.

இவ் விமானத்தில் 149 பயணிகளும் 8 விமான சிற்பந்திகளுமாக மொத்தம் 157 பேர் இருந்தனர். பயணிகள் 149 பேரில் 33 நாடுகளின் பிரஜைகள் இருந்துள்ளனர். பெரும்பாலும் ஆபிரிக்க நாட்டு விமானங்களில் இந்தளவு அதிகமான நாட்டவர்ள் ஒரே விமானத்தில் பயணிப்பதில்லை. இருந்த போதிலும் அன்றைய தினம் நைரோபியில் நடைபெறவிருந்த ஐ.நா.வின் சுற்றுப் புற சூழல் பற்றிய மாநாட்டினை முன்னிட்டு, அதில் கலந்துகொள்வதற்காகவே அந்தளவு பல நாடுகளிலுமுள்ளவர்கள் புறப்பட்டனர்.

இவ் விமானம் அடிஸ் அபா விமான நிலையத்திலிருந்து காலை 08.15 மணிக்கு புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 23 நிமிடங்கள் தாமதமாகியே குறித்த விமானம் புறப்பட்டிருந்தது.

பின்னர் விமானம் மேலெழுந்ததும் தென் கிழக்கு திசையில் குறிப்பிட்ட உயரம் வரை பறந்தது. இந் நிலைமையில் குறித்த விமானம் புறப்பட்டு 06 நிமிடங்களில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் வைத்திருந்த தொடர்பை இழந்துள்ளாக அறியமுடிவதுடன், விமானம் எப்போதும் சீராகவே மேலெழும் ஆனால், இது சீரற்ற முறைமையில் உயரம் கூடிக் குறைந்து மேலெழுந்ததாக வெளிநாட்டு ஊடகமொன்றின் தகவல்களிலிருந்து அறியக் கிடைத்துள்ளது.

இந் நிலைமையிலேயே அடிஸ் அபா விமான நிலையத்திலிருந்து குறிப்பிட்ட மைல் தொலைவில் சென்ற போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. அதன் போது விமானத்திலிருந்த 157 பேரும் பரிதாபமாக உயிரிழிந்த சோகம் முழு உலகையுமே உலுக்கியது.

‘போயிங்’ ரக விமானங்களுக்கு இது ஒன்றும் புதிய விடயமல்ல ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் ‘லயன் எயர்’ நிறுவனத்தினால் “போயிங் சம் 97 – மெக்ஸ் 8” ரக விமானம் இந்தோனேஷிய விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இதேபோன்றதொரு அனர்த்தத்துக்கு உள்ளகியது.
அந்த அனர்த்தமும் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே நிகழ்ந்துள்ளது. ஆனால், அவ் அனர்த்தம்; குறித்தும் இது வரையில் எவ்வித இறுதி அறிக்கைகளும் வெளியாகவில்லை.

இப்படியான நிலையில் இவ் இரண்டு அனர்த்தங்களையும் உற்றுநோக்கினால் இரண்டுக்குமிடையே பாரிய ஒற்றுமைகள் உள்ளன.

விமானம் புறப்பட்டு சில நிமிடங்களின் பின்னர் விமானம் தரைக் கட்டுப்பாட்டை இழந்தது. அச் சந்தர்ப்பத்தில் விமானிகளால் ‘மீண்டும் புறப்பட்ட விமான நிலையத்திற்கே திரும்புகிறோம்’ எனக் கூறிய சமிக்ஞையையும் அவர்களால் தொடர முடியாமல் போனது.

இவ் இரண்டு விமானங்களும் ‘போயிங்’ நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய விமானங்களாகும். இப்படி அடுக்கடுக்காய் விழுகின்ற அபார தாக்குதல்கள் குறித்து அனைத்து நாடுகளும் ‘போயிங்’ நிறுவனத்தின் மேல் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், பொரும்பாலான நாடுகள் ‘போயிங்’ ரக விமானங்களுக்கு தடையும் விதித்துள்ளன.

2017ஆம் ஆண்டளவில் சந்தைக்கு அறிமுகமான ‘போயிங் மெக்ஸ் 8’ ஆனது, இதுவரையில் 350 வெவ்வேறு விமான நிலையங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், 5017 இதே ரக விமானங்கள் கேள்வியிலும் உள்ளன.

ஆக மொத்தத்தில் ‘போயிங்’ நிறுவனத்துக்கு குறித்த ரக விமான விற்பனை மூலமே அதிக இலாபம் கிட்டுகின்றது. இச் சந்தர்ப்பத்தில் ‘போயிங்’ நிறுவனம் தனது புதிய ரக விமானமொன்றையும் அறிமுகம் செய்ய காத்திருந்த வேளையிலேயே எதியோப்பியாவிலிருந்த புறப்பட்ட ‘மெக்ஸ்’ ரக விமானத்துக்கு அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்புப் பெட்டி உட்பட சில முக்கிய பகுதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இது குறித்த விசாரனைகள் முன்னெடுக்கப்பட்;டு வருவதாகவும் தகவல்களிலிருந்து அறிய முடிகின்றது.

இப்படி விமான விபத்துக்கள் உள்ளாகி சில காலங்களுக்கு மாத்திரம் அது குறித்த நிகழ்வு பேசப்பட்டு சில நாட்களின் பின்னர் அக் கருத்துக்கள் அஸ்தமனமாகிவிடுகின்றன.

ஒன்றன் பின் ஒன்றாக இதுபோன்ற பல சம்பவங்கள் ஸ்தீரனமாகிய பின்னர் மூடி மறைந்து செல்லப்படுகின்றது.

இவ்வளவு உயிர்கள் காவு கொள்ளப்பட்ட சம்பவங்களையும், அதன் அடிப்படைகளையும் தேடி அவற்றுக்கான குளறுபடிகளை கண்கானிக்க விமான நிறுவனங்களால் குழு அனுப்பப்பட்டாலும் அவை கண்டுபிடிக்கப்பட்ட வரலாறுமில்லை, சீரான வரலாறுமில்லை.

ஆக மொத்தத்தில் விமான விபத்து என்பது வெறுமெனே விமான நிறுவனக் கோளாறு என்றன்றி இது இறைவனின் நியதி என்ற நிலைப்பாட்டிற்கு அனைத்து மத மக்களும் மனதால் முடிவாகிவிடுகின்றனர். குறித்த இவ் விபத்தின் போது, ஒருவர் உயிர் தப்பிய அதிர்ச்சி செய்தியும் எமது செவிகளைத் தாவியது.

அது கூட அவரின் நல்ல காலம் என்று தான் கூறவேண்டும். விமான நிலையத்தில் விமான நுழைவுக்கான கதவு அடைக்கப்பட்டு 8 நிமிடங்கள் தாமதித்தாலேயே அவர் உயிர் தப்பியுள்ளார். இவற்றையும் நடந்தவற்றையும் வைத்து உற்று நோக்குகையில் ஒவ்வொரு மாதத்தவரும் அவரவர் கடவுள் விதி என்ற நிலைப்பாட்டிற்கே வந்து விடுகின்றனர்.

இருந்தாலும், விமான விபத்துக்களின் பின்னணி ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அலச வேண்டிய அதி உச்சமான விடயம். சாத்வீக துயரங்களால், தார்மீக கடமைகள் துச்சமாக்கப்பட வாய்ப்புக்கள் பல உள்ளன.

✍️ கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *