நிலநடுக்கம் குறித்து முன் கூட்டியே எச்சரிக்கை தரும் செயலி அறிமுகம்!

அமெரிக்காவில் நிலநடுக்கம் பற்றி மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் வகையிலான செயலி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Shake Alert LA என பெயரிடப்பட்டு உள்ள இந்த செயலியை, லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண நிர்வாகம் அறிமுகம் செய்து உள்ளது.
நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 15 நொடிகளுக்கு முன்பு மின்னஞ்சலிலோ, செய்தி அறிவிப்பாகவோ இந்த செய்தி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்.
இந்த செயலி  அமெரிக்க புவியியல் மையத்தோடு இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கலிபோர்னியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான நில அதிர்வுகள் ஏற்படுகிறது.
இவற்றில் பலவற்றின் அளவு மிகவும் குறைவு என்றாலும், மக்களை எச்சரிக்கும் விதமாக இந்த செயலி கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த செயலி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *