கூட்டமைப்பு – மு.கா. மோதுவது நல்லதல்ல!

தமிழ் – முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து விடக்கூடாது என்கிறார் ஹக்கீம்

“அரசியல்வாதிகளின் தனிப்பட்ட போக்கினால் தமிழ், முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களும் பிரிந்து விடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சண்டைபோடுவதற்கு முதல் எங்களுக்குள் பேசிப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். இரு கட்சிகளும் மோதுவது நல்லதல்ல.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்த வருடம் தேர்தல் வருடமாகும். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஏற்கனவே நடைபெற வேண்டிய தேர்தலை காலம் தாழ்த்தினாலும் இவ்வருடக் கடைசியில் ஜனாதிபதித் தேர்தலையாவது நாட்டு மக்கள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. தேசிய ரீதியாக ஒரு தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும்.

இந்நாட்டினுடைய அரசியல் போக்கை சிறுபான்மை சமூகத்தினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்க முடியும்.

அரசியல்வாதிகளின் தனிப்பட்ட போக்கால் இவ்விரண்டு சமூகங்களும் பிரிந்து விடக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் சண்டைபோடுவதற்கு முதல் எங்களுக்குள் பேசிப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். இரு கட்சிகளும் மோதுவது நல்லதல்ல” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *