திமிங்கலம் தாக்கி சேதமடைந்த கப்பல்: 87 பேர் காயம்!

ஜப்பானில் திமிங்கலத்தால் கப்பல் ஒன்று தாக்கப்பட்டத்தில் குறைந்தது 87 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

அந்தக் கப்பல் சனிக்கிழமையன்று நிகாடா துறையில் இருந்து சடோ தீவிற்கு சென்று கொண்டிருந்தது.

திமிங்கலம் இடித்ததில் 15செ.மீ நீளத்திற்கு கப்பல் நடுபகுதியில்பிளவு ஏற்பட்டுள்ளதாக கப்பலை இயக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிபுணர்கள் இந்த சம்பவத்தை ஆராய்ந்து இது திமிங்கலத்தால் ஏற்பட்ட பாதிப்பு போன்று காட்சியளிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

“என் தலை எனது முன் இருந்த இருக்கையில் வேகமாக முட்டிக் கொண்டது” என பயணி ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.மேலும் பயணிகள் வலியில் அலறினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த சமயத்தில் இருந்த கப்பல் பணியாளர்களும், 121 பயணிகளும் இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஐந்து பேர் உடல்நிலை மோசமாக உள்ளதாக கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் அந்த கப்பலின் இறக்கையும் இந்த மோதலில் சேதமடைந்தது.

ஜப்பான் கடற்கரையில் இந்த காலகட்டத்தில் அதிகப்படியான திமிலங்கள் இடம் பெயர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *