மாணவி மரணத்தில் சந்தேகம் ! படுகொலையா என பலகோணங்களில் விசாரணை!

பொகவந்தலாவ – டின்சின் தோட்டத்தில் கால்கள் இரண்டும் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியொருவரின் சடலம் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளது.

டின்சின் தமிழ் மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கலை பிரிவில் கல்வி கற்ற 18 வயதான முத்துமணி  பிரியவர்ஸினி என்ற மாணவியே  மர்மமான முறையில் மரணித்துள்ளார்.

எனவே, இது கொலையா அல்லது தற்கொலையா என்பதை கண்டறிவதற்காக பொகவந்தலாவ பொலிஸார் பலகோணங்களில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தூக்கில் தொங்கிய மாணவியின் கால்கள் இரண்டும் கட்டப்பட்டுள்ளதுடன், பலகோணங்களில் கருத்துகளும் முன்வைக்கப்பட்டுவருவதால் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கைரேகை பிரிவினர் ,அட்டன் நீதிமன்ற நீதவான் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

க.கிசாந்தன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *