ஜெனிவாவில் களமிறங்குகிறார் வடக்கு ஆளுநர்!

ஜெனிவாக் கூட்டத்தொடரில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியாக பங்கேற்கவுள்ளார்.

இராஜதந்திர சமர்க்களம்’ என வர்ணிக்கப்படும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத் தொடர் சுவிஸ் தலைநகரான ஜெனிவாவில் கடந்த 25 ஆம் திகதி  ஆரம்பமாகின்றது.

மார்ச் 22 ஆம் திகதி வரை நடைபெறும் குறித்த மாநாட்டில், இலங்கை விவகாரம் குறித்து 20 ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது.

பிரிட்டன், கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரனிக்கோ ஆகிய நாடுகள் இணைந்து அன்றைய தினம் இலங்கை குறித்தான புதிய தீர்மானத்தை பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளன.

இவ்விவாதத்தில் பங்கேற்று, விளக்கமளித்து – உள்ளக்பொறிமுறையை கோருவதற்காகவே ஜனாதிபதியின் சார்பில் பிரதிநிதிகள் குழுவொன்று செல்லவுள்ளது.

மஹிந்த ஆட்சியின்போது ஜெனிவா விவகாரத்தைக் கையாண்ட முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம ஆகியோரும் ஜெனிவா பயணிக்கும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *