எனக்கு முத்தம் கொடுப்பது ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! – ஆனால் கல்யாணம் வேண்டவே வேண்டாம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடிக்கும் படம் 90 எம்.எல். இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி இருக்கும் சூழலில் ஓவியா அளித்த பேட்டி வருமாறு:-

சர்ச்சையான கதையைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்தக் கட்டுப்பாடுகளை மீறவேண்டும் என்பதே இந்தப் படத்தின் ஒருவரி கதை. படத்தில் வயது வந்தோருக்கான வி‌டயங்கள் இருப்பதால்தான் ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கின்றார்கள். யூடியூப்களில் எல்லாம் இதைவிட ஆபாசம் இருக்கின்றது. படத்தில் பேசப்படும் வசனங்கள் எல்லாவற்றையும் ஓவியா பேசியதாகப் பார்க்க வேண்டாம். படத்தில் வரும் ரீட்டா கதாபாத்திரம் பேசியதாகப் பாருங்கள்.

இது உங்கள் இமேஜை பாதிக்குமே?

பிக்பாஸ் உள்பட எங்குமே எதையுமே நான் பெயருக்காகவோ புகழுக்காகவோ செய்யவில்லை. அப்படி இமேஜ் பார்த்து நான் நடந்துகொண்டு இருந்தால் இந்த பெயரோ புகழோ எனக்கு கிடைத்து இருக்காது. எனவே, பெயர் போய்விடுமோ என எனக்கு எந்தப் பயமும் இல்லை. ஒரே மாதிரி என்னால் நடிக்க முடியாது. அது போரடிக்கும். பெயர், புகழ் பற்றி கவலை இல்லை. காரணம் எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.

இதில் முத்த காட்சிகள் அதிகமாக இருக்கின்றதாமே?

ஆமாம். எனக்கு முத்தம் கொடுப்பது மிகவும் பிடிக்கும். இதிலும் நிறைய முத்தக்காட்சிகளில் நடித்து இருக்கின்றேன்.

அந்தக் காட்சிகளில் நடித்தது கடினமாக இருந்ததா?

இல்லை. சிகரெட் பிடிக்கும் காட்சிகள்தான் கடினமாக இருந்தன. நாங்களும் கஷ்டப்பட்டுத்தான் நடிக்கின்றோம். இதுபோன்ற படங்களுக்கும் விருது கொடுக்க வேண்டும்.

மீடூ இயக்கம் பற்றி உங்கள் கருத்து என்ன?

உங்கள் மனைவியாக இருந்தாலும் அவர் அனுமதி இல்லாமல் தொடக்கூடாது. இதுதான் என் கருத்து.

கல்யாணத்தின் மீது ஏன் நம்பிக்கை இல்லை?

எனக்கு கல்யாணத்துல நம்பிக்கை கிடையாது. அது வேண்டாம் என்று நினைக்கிறேன். ஆனா வாழ்க்கை நம்மை எங்கே கொண்டுபோய் சேர்க்கும் என்று தெரியாது. நான் சின்ன வயசுல இருந்தே சுதந்திரமாக வளர்ந்த பெண். தன்னிச்சையாக செயல்படுவேன். அதனால் கல்யாணம் எனக்கு எந்தவிதத்துல பொருந்தும் என்று தெரியவில்லை. தவிர எனக்கு ஒருவரின் ஆதரவு வேண்டும் என்று இப்போது வரை தோணவில்லை.

நயன்தாரா உங்களுக்குப் போட்டியா?

எனக்கு நான் மட்டும்தான் போட்டி. எல்லாத் தரப்பு கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். சவாலான வேடங்களில் நடிக்கத்தான் விரும்புகிறேன்.

இவ்வளவு துணிச்சலான நீங்கள் பிக்பாஸில் தற்கொலைக்கு முயற்சி செய்தது ஏன்?

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தோன்றியது. எனக்கு அப்போது வேறு வழி தெரியவில்லை. எனவே, அப்படி செய்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *