கஞ்சிப்பான இம்ரானின் நெருங்கிய சகா ஹெரோயினுடன் சிக்கினார்!

பாதாள உலகக் குழுத் தலைவன் மாக்கந்துர மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள குழு உறுப்பினர் கஞ்சிப்பான இம்ரானின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

கொலன்னாவ – சாலமுல்ல பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய மொஹமட் நவ்பர் மொஹமட் அலி என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *