‘ஜனநாயகம்’ குறுந்திரைப்பட போட்டி!

ஜனநாயகம், மக்கள் மேலாண்மை, சர்வஜன வாக்குரிமை போன்றவை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான குறுந் திரைப்பட போட்டி நடத்தப்படவுள்ளது.
இதனை களனி பல்கலைக்கழகமும் கல்வியமைச்சும் இணைந்து நடத்துகின்றன. பாடசாலைகள் பிரிவு, பகிரங்க பிரிவு என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் மும்மொழிகளிலும் படைப்புக்களை சமர்ப்பிக்கலாம்.
ஐந்து நிமிடங்களுக்கு மேற்படாத குறுந் திரைப்படங்களை மே மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்க வேண்டும்.
அனைத்து தயாரிப்புகளும் தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அல்லது களனி பல்கலைகழகத்தின் வெகுஜன தொடர்பாடல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
பகீரங்கப் போட்டிப் பிரிவில் முதலாவது இடத்துக்கு தெரிவாகும் குறுந்திரைப்படத்துக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாவும் இரண்டாம்  இடத்துக்கு ஒரு லட்சம் ரூபாவும் மூன்றாம் இடத்துக்கு 75 ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
பாடசாலை மட்டத்தில் நடத்தப்படும் போட்டியில் முதலாம் இடத்துக்கு தெரிவாகும் குறுந் திரைப்படத்துக்கு 50 ஆயிரமும் ரூபாவும் இரண்டாம் இடத்துக்கு 30 ஆயிரம் ரூபாவும் மூன்றாம் இடத்துக்கு 20 ஆயிரம் ரூபாவும் பரிசாக வழங்கப்படவுள்ளன என ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் படைப்புகளுக்கு பணப்பரிசில் வழங்கப்படும்.
அதேவேளை, ஜனநாயகம், மக்கள் மேலாண்மை, சர்வஜன வாக்குரிமை போன்றவை பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து கருத்தரங்கு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 15ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை 22 கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இது தொடர்பான ஊடகவியளாளர் மாகாநாடு அரசாங்க திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் நேற்று நடைப்பெற்றது.
தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களான ஜனாதிபதி சட்டதரணி நலின் அபேசேகர பேராசிரியர் ரத்ண ஜீவன் ஹூல் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ களணி பல்கலைக்கழகத்தின் விஷேட விரிவுரையாளர்களான அருண லோகு இயன மற்றும் தர்ஷன சோமரத்ண உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *