பெண்கள் பயணிக்க ‘தனி ரயில் பெட்டி’ – மகளிர் தினத்தன்று நடவடிக்கை!

ரயில் பயணங்களின்போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பதற்காக,  போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன  ரணதுங்க தனித்துவமான ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்யத்  தீர்மானித்துள்ளார்.
இதன் முதற் கட்ட நடவடிக்கை, மகளிர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் மார்ச் மாதம் எட்டாம்  திகதி முன்னெடுக்கப்படும்.
வெயாங்கொடை ரயில் நிலையத்தை மேற்பார்வை செய்வதற்காக அமைச்சர் நேரில் சென்றிருந்தார். இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
பெண்களுக்கென தனித்துவமான ரயில் பெட்டிகளை அறிமுகம் செய்யும் வேலைத் திட்டம்,  முதற்கட்டமாக பாரிய நகரங்களை நோக்கிச் செல்லும் ஐந்து ரயில்களில் மேற்கொள்ளப்படும். குறிப்பாக,  வேலை நேரங்களை மையப்படுத்தி,  இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படும்.
   பெண்களின் பாதுகாப்புத்  தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டியுள்ளது.    இதனால், ரயிலில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பாக செளகரியமாகச்   செல்ல வேண்டும்.
   இதேவேளை, ரயில் நிலையங்களின் வசதிகளை அதிகரிக்கவும் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
    அத்துடன்,  வெளிநாட்டுப் பயணிகளுக்கு அவசியம் தேவையான அதி சிறந்த வசதிகள்,  அனைத்து ரயில் நிலையங்களிலும் பெற்றுக் கொடுக்கப்படும்.
   இதுதவிர, ரயில் நிலையங்களின் முகாமைத்துவத்தைத்  தரமுயர்த்தும் நோக்கில், அதன் சுத்திகரிப்பில் தனியார் அமைப்புக்களை ஈடுபடுத்தவும்  தீர்மானித்துள்ளோம்.  இதற்காக,  ரயில்வேத்  திணைக்களம் தனியார் மயப்படுத்தப்பட்டிருப்பதாக,  தவறாக அர்த்தம் கொள்ளக்கூடாது என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *