கழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி! கூகுளால் பரபரப்பு!!

உலகின் சிறந்த கழிவறை பேப்பர்’ எது என்ற கூகுள் தேடலுக்கு பாகிஸ்தான் கொடி வருவது போல் கூகுள் தேடலில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில இந்தியர்களால் மாற்றப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் புல்வாமாவில் வியாழனன்று நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நாற்பதுக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர்.

இந்திய ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி தொடங்கியதிலிருந்து இந்தியப் படைகள் மீது நடத்தப்பட்ட மிக கொடூரமான தாக்குதல் இது என்று கருதப்படுகிறது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த கொடி மற்றும் கழிவறை பேப்பர் தொடர்பு, புல்வாமா தாக்குதல் நடைபெற்ற உடன் சில வலைப் பதிவுகளில் தாக்குதல் பற்றி பேச தொடங்கியவுடன் எழுந்துள்ளது மேலும் வார இறுதியில் அது டிரண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

கொடி மற்றும் டாய்லெட் பேப்பர் தொடர்பாக கூகுளில் அதிகப் பேர் தேடினால் அது தொடர்பான விளைவுகளையே கூகுள் காட்டும்.

தற்போது கூகுளில் பெஸ்ட் டாய்லெட் பேப்பர் என்று தேடினால் அது தொடர்பாக வெளியான செய்திகளை கூகுள் காட்டுகிறது. ஆனால் புகைப்படங்களை தேடினால் பச்சை மற்றும் வெள்ளை கொடியாலான பக்கமே அதிகம் வருகிறது.

அதில் வரக்கூடிய பெரும்பாலான புகைப்படங்கள் இந்த கொடி மற்றும் கழிவறை பேப்பர் தொடர்பான செய்திகள் குறித்த படம்.

பிற புகைப்படங்கள், கொடியையும், கழிவறையையும் குறித்து எழுத்தப்பட்ட சமூக வலைதள பதிவின் ஸ்கிரீன் ஷாட்டுகள்.

ஆனால் இது எப்படி நடந்தது என்பது குறித்து கூகுள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

கூகுள் தேடலில் இம்மாதிரியான புகைப்படங்கள் வருவது இது முதல்முறையல்ல.

இதற்கு முன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோதி குறித்த தேடல்களில் சில அவமரியாதையான சொற்கள் வந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *