‘காணாமல்போனோரின் உறவுகள்’ 25ஆம் திகதி மாபெரும் போராட்டம்! – வடக்கில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு – கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை எதிவரும் 25ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நிறுவனம் சார்ந்த பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் அனைவரும் ஒன்றுகூடி இலங்கை அரசுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் மற்றும் சர்வதேச சமூகத்துக்கும் தமது நியாயமான கோரிக்கைகளை வெளிப்படுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.

அன்று மாபெரும் பேரணி ஏ – 9 வீதி ஊடாக நகர்ந்து கிளிநொச்சி டிப்போ சந்தியை அடைந்து இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதியிடம் மகஜர் கையளிக்கப்படும்.

இந்த மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு வடபகுதியில் பூரண கதவடைப்புடன் கூடிய ஹர்த்தலை அனுஷ்டிப்பதற்கு முழுமையான – உணர்வுபூர்வமான பங்களிப்பை வழங்குமாறு கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *