சிலாபத்தில் அதிகாலை கோர விபத்து! 4 பேர் பரிதாபப் பலி; 19 பேர் படுகாயம்!!

 

சிலாபம் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 19 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி வண்டரஹ தனியார் பஸ் ஒன்று சிலாபம் – மஹாவெவயில் இன்று அதிகாலை மின்மாற்றி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 19 பேரும் மாரவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *