மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனை!

கம்பஹா  மாவட்டத்தில் உள்ள சில பாடசாலை மற்றும்  அறநெறிப்  பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்தும் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டுவருவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இப்பகுதியைப்  பொறுத்தவரையில் சகல மதங்களையும் சார்ந்த அறநெறிப் பாடசாலைகள்,  வார இறுதி நாட்களில் அவ்வப்பகுதி மத வழிபாட்டுத்தலங்களிலும் பொது இடங்களிலும் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறு வழிபாட்டுத்தலங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத போதனைகளைப்  பெற்று வருகின்றனர்.
 எனினும்,  போதைவஸ்து விற்பனையாளர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் இம்மாணவர்கள் குறித்த பாடசாலைகளுக்கு வருகை தரும் போதும்,  வெளியேறிச் செல்லும் போதும் இம்மாணவர்களை இலக்கு வைத்து,  போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாகத்  தெரிவிக்கப்படுகிறது.
   இவ்விடயமாக இம்மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் விழிப்பாக இருக்குமாறும்,  பிரதேச சர்வமத அமைப்புக்கள் உட்பட சமூக நல அமைப்புக்கள் என்பன  வேண்டுகோள் விடுத்துள்ளன.
( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *