சத்தியம் தவறி நடந்தார் மஹிந்த ! சுமந்திரன் குற்றச்சாட்டு

போர் முடிவடைந்த பின்னர் அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு மஹிந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாகவே இலங்கை சர்வதேசத்தின் பிடிக்குள் சிக்கியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி மாநாடு நல்லூரில் இன்று 16 காலை இடம்பெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

து தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் 2011 ஆம் ஆண்டில் மஹிந்த தலைமையிலான ஆட்சியுடன் 18 தடவைகள் பேச்சு நடத்தினோம். எனினும், மஹிந்த தரப்பே அதை  குழப்பியடித்தது. மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்ல.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உலக நாடுகள் அனைத்தும் இலங்கைக்கு ஆதரவு வழங்கின.  போர் முடிவடைந்தப்பின்னர் முன்னெடுக்கப்படும் என மஹிந்தவால் வழங்கப்பட்ட உறுதிமொழியின் பிரகாரமே அவை ஆதரவு வழங்கின. ஆனால், வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

13 ஆவது அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவேன், அதுமட்டுமன்றி அதற்கு அப்பால் சென்று அதிகார பகிர்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவேன் என கூறியிருந்தார். இதில் இந்தியாவிற்கு மட்டும் 3 தடவை எழுத்தில் வாக்குறுதியளித்தார்.

ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 இல் இந்தியா இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தையை நடத்த ஊக்குவித்தது. கால இழுத்தடிப்பின் பின்னர் முடிவெடுக்கப்பட்டு 2012 இல் பேச்சுவார்த்தைக்கு திகதி குறிப்பிட்ட நிலையில் அப்பேச்சுவார்தையில் இருந்து மஹிந்த விலகினார்.

இவ்வாறு சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை ஏமாற்றி அதனை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த செய்த பல முயற்சி, சர்வதேசத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்திற்கு பிரதான காரணமாக அமைந்தது.” என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *