போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ‘பட்ஜட்’ மூலம் நிவாரணம் வழங்குக! – அரசிடம் மாவை கோரிக்கை

“போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு வரவு – செலவுத் திட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நுண்கடன்களைப் பெற்றுச் சுமைகளுடன் உள்ள பெண்களுக்கு அதிலிருந்து அவர்களை விடு விக்கும் வகையில் காசோலைகளைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே மாவை சேனாதிராஜா எம்.பி. இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இங்கு மாவை எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,

“நுண்கடன்களைப் பெற்றுபெரும் வட்டியை அதற்காக செலுத்துவதில் பெருமளவிலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, பெண்கள் பெரும் சிக்கல்களுக்குள்ளாகியுள்ளனர்.

நிதி அமைச்சின் ஏற்பாட்டில், அவர்களைக் கடன் சுமையிலிருந்து விடுவிக்கும் வகையில், நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்துக்காகப் பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் நாம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நுண்கடன்களை வழங்கும் வங்கித்துறையினர் எமது பெண்ளை மிக மோசமான அவல நிலைக்குத் தள்ளியுள்ளனர். இந்தநிலையில், அந்தக் கடன்கள் தொடர்பில் நாம் அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம். பலமுறை அது தொடர்பில் வலியுறுத்தியுள்ளோம்.

இதற்கிணங்க, அரசால், அதற்கான தீர்வு வழங்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரியது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *