அமெரிக்காவில் ஒருவர் மட்டுமே வசிக்கும் நகரம்

அமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும் சிறிய நகரத்தில் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார்.

உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்காவில் அங்குள்ள மக்கள் அல்லாமல் பிற நாட்டினரும் குடியேறியுள்ளனர்.

மக்கள் அதிகம் வசிக்கும் நாடான அமெரிக்காவில் நப்ராச்கா பகுதியில் மோனோவி எனும் சிறிய நகரம் உள்ளது. இப்பகுதியில் எல்சி எய்லர்(84) எனும் மூதாட்டி மட்டுமே தனியாக வாழ்ந்து வருகிறார்.

இது குறித்து எல்சி எய்லர் கூறியதாவது:-

இப்பகுதியில் நான் மட்டுமே வசிக்கிறேன். இங்கு இருந்தவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து சென்று விட்டனர்.

எனது பெற்றோர் இந்த நகரத்தை தாண்டி உள்ள விவசாய நிலப்பகுதியில் பணிகளை மேற்கொள்ள சென்றனர். எனக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

இருவரும் நான் இங்கு இருப்பதையே விரும்புகிறேன் என்பதை உணர்ந்தனர். மேலும் 1971 முதல் காபி, டீ போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறேன்.

இந்த கடையை திறந்த போது , இப்பகுதியில் இருந்த தபால் நிலையமும், சிறிய மளிகை கடையும் மூடப்பட்டது. இந்தப்பகுதியில் உள்ள சாலையின் வழியே செல்லும் பல டிரக்குகள், வியாபாரிகள், தற்போது வாடிக்கையாளர்களாக மாறி உள்ளனர்.

மேலும் இப்பகுதி இயற்கையுடன் கூடிய அமைதியுடன் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இதனால் இது தற்போது ஹப் போலாகி விட்டது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதுமட்டுமின்றி கூடுதல் பொறுப்பாக எந்தவித போட்டியுமின்றி இந்த பகுதியின் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.

எனக்கு 84 வயதாகிறது. இந்நிலையில் என்னை பார்ப்பதற்காகவே சிலர் வருகின்றனர். தனிமையில் இருந்தாலும், நான் எவ்வித மன வருத்தமும் இன்றி இங்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *