தேசிய அரசை ஏற்க முடியாது! – மனோ திட்டவட்டம்

தேசிய அரசைக் கொள்கையளவில்தான் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தேசிய அரசு என்பது உண்மையில் நல்ல விடயம்தான். ஆனால், இலங்கை போன்றதொரு நாட்டுக்கு இந்த தேசிய அரசு முறைமை பொருத்தமானதா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தான் நாம் 2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை இணைத்து நல்லாட்சிக்கான தேசிய அரசு ஒன்றினை உருவாக்கினோம். ஆனால், இன்று அந்த அரசின் நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றது.

நாங்கள் பொறுப்புடன் உருவாக்கிய அந்த தேசிய அரசு இன்று அதாள பாதாளத்தில் விழுந்து இருக்கின்றது.

முன்னேற்றமடைந்த நாடுகளில் அதாவது அறிவும் இதயமும் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த தேசிய அரசென்பது சாத்தியப்பாடானதொரு விடயமாகும்.

நாட்டை நேசிக்காமல் தனது பதவியையும் தனது குடும்பத்தையும் மட்டுமே எண்ணிச் செயற்படும் அரசியல்வாதிகளே எமது நாட்டில் இருக்கின்றார்கள்.

எனவேதான் நான் எமது நாட்டுக்கு தேசிய அரசு என்பது பொருத்தமற்றது எனக் கூறுகின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *