பாம்பை காட்டி பயமுறுத்தி திருடனிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸ்!

திருடனாக சந்தேகப்படும் ஒருவரிடம் பாம்பை காட்டி வாக்குமூலம் பெற முயற்சித்த பொலிஸாரின் நடவடிக்கை,  காணொளியாக வெளியானதை தொடர்ந்து, இந்தோனேசிய பொலிஸ் மன்னிப்பு கேட்டுள்ளது.

கிழக்கு பாபுவா பிரதேசத்தை சேர்ந்த மனிதர் ஒருவர் கைவிலங்கிட்டு கத்திக்கொண்டிருக்கையில் விசாரணை செய்கிற போலீஸ்காரர் பாம்பை காட்டி பயமுறுத்துகின்றபோது, அங்கிருந்த அதிகாரிகள் சிரிப்பது காணொளியில் தெரிகிறது.

இந்த சந்தேக நபர் செல்பேசிகளை திருடியதாக நம்பப்படுகிறது.

“இது தொழில்முறைக்கு புறம்பான நடவடிக்கை” என்று தெரிவித்த உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர், “இந்த பாம்பு விஷமில்லாதது, பழக்கப்படுத்தப்பட்டது” என்று கூறி போலிஸின் செயலை நியாயப்படுத்தியுள்ளார்.

நாங்கள் அந்த போலீஸ் மீது உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்த டோணி அனந்தா ஸ்வாடாயா, “அதிகாரிகள் அந்த நபரை அடித்து துன்புறுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

“சந்தேக நபரிடம் இருந்து குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு தங்களின் சொந்த முயற்சியில் இந்த நடவடிக்கையை போலீஸ்காரர் மேற்கொண்டுள்ளார்” என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் பற்றிய காணொளியை பற்றி “பாபுபா சுதந்திரத்திற்கு ஆதரவான செயற்பாட்டாளரை, பாம்போடு சேர்த்து சிறை அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்”

என்று மனித உரிமைகள் வழக்கறிஞர் வேரோனிக்கா கோமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த பாம்பை அந்த மனிதரின் வாயிலும், காற்சட்டையிலும் போட்டுவிடுவதாக குரல் ஒன்று இந்த நபரை மிரட்டிக் கொண்டிருக்கிறது,

இந்தோனீசியாவில் இருந்து, தனிநாடாக நீண்டகாலமாக சுதந்திரத்தை கோரி வரும் பிரிவினைவாதிகள் வாழுகின்ற பாபுபாவில் மனித உரிமை மீறல்கள் பொதுவாக நடைபெறுகின்றன.

பாபுவா நியூ கினியின் எல்லை பகுதிகளில் அதிக மூலவளங்கள் காணப்படுகின்றன. 1969ம் ஆண்டு பாபுவா நியூ கினி இந்தோனீசியாவின் பகுதியாக மாறியது.

சுதந்திரத்தை கோருகின்ற கிளர்ச்சியாளர்களை கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு மத்தியில், இந்த மாநிலத்தை விட்டு படையினர் வெளியேற வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் பாபுவா ஆளுநர் லூகாஸ் இனிம்பி, கூறியுள்ளார்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் பல கட்டுமானப் பணியார்களை கொன்ற சுதந்திர பாபுவா இயக்கத்தின் ஆயுதப்படை உறுப்பினர்களை ராணுவம் தேடி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *