ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் உதயம்!

 

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் உதயமானது.

ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்

செயலாளராக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உமாச்சந்திரா பிரகாஷ், பொருளாளராக ஜி. ஹரிகரன், உப தலைவராக பெ. பிரதீபன், உப செயலாளராக எஸ்.சத்தியசுதர்சன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

அத்துடன் ஶ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் மாவட்ட பிரதிநிதிகளும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

மாவட்ட பிரதிநிதிகளின் விபரம் வருமாறு:-

கண்டி – அ. செல்வகுமார், மாத்தளை – நா. சசிகரன், முல்லைத்தீவு – அ. பரமதாஸ், மன்னார் – எஸ். ஜே. ஜெயபொலின், அம்பாறை – க. இரகுபதி, கேகாலை – சத்தியநாதன், புத்தளம் – க. தட்சணாமூர்த்தி, மட்டக்களப்பு – த. கெங்காதரன், இரத்தினபுரி – நிக்‌ஷன் சூரியகுமார், யாழ்ப்பாணம் – பி. ஆதவன், கிளிநொச்சி – நகுலேஸ்வரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *