குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த வடக்கில் விசேட பொலிஸ் குழுக்கள்!

வடக்கில் அதிகரித்துள்ள கஞ்சாக் கடத்தல் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இங்குள்ள மக்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்காக பொலிஸார் மேற்கொள்ளும் தேடுதல்கள் மற்றும் சோதனைகளுக்கு தங்களது முழுமையாக ஆதரவையும் ஒத்துழைப்புக்களையும் பொது மக்கள் பொலிஸாருக்கு வழங்கவேண்டும்.

வடக்கில் பல இடங்களிலும் பல்வேறு குற்றச் செயல்கள் நடக்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாகப் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து வருகின்றது. அதிலும் கஞ்சா கடத்தலே அதிகமாகக் காணப்படுகின்றது. அத்தோடு வாள்வெட்டுச் சம்பவங்கள், கொள்ளைகள் என்பனவும் நடக்கின்றன.

ஆகவே, இவற்றைக் கட்டுப்படுத்தி இல்லாதொழிக்கவேண்டியது அவசியம். அதற்கமையவே பொலிஸார் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது விசேட குழுக்களை அமைத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.

இதற்கமைய இரகசியமாகவும் அதே நேரம் நேரடியாகவும் மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களாலான முழுமையான ஒத்துழைப்பை பொது மக்கள் வழங்க வேண்டும்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்களது நிம்மதியான வாழ்வுக்காகவுமே பொலிஸார் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *