வெளிநாடுகளுக்குத் தப்பியோடிய வாள்வெட்டுக் குழுக்களுக்கு ஆப்பு!
யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பி அனுப்புமாறு அந்தந்த நாட்டு அரசுகளிடம் விண்ணப்பிக்கவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“யாழ்ப்பாணத்தில் கடந்த காலத்தில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தலைமறைவாகியுள்ளனர். சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.
இவ்வாறான நபர்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அந்தந்த நாட்டு அரசுகளிடம் கோரவுள்ளோம். இந்த நடவடிக்கை பொலிஸ்மா அதிபர் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது” – என்றார்.