படைப்புழுவால் பழச்செய்கைக்கும் ஆபத்தா?

படைப்புழுவினால் பழச் செய்கைகளுக்கு எவ்விதத் தாக்கங்களும்  ஏற்படவில்லை என, பழச் செய்கைகள்  ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட பரிசோதனைகளின்போதே இது உறுதிப்படுத்தப்பட்டதாக, நிறுவனத்தின் பணிப்பாளர் ஈ.ஆர்.எஸ்.பி. எதிரிமான்ன குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அனைத்துப் பகுதிகளிலும் ஆராய்ந்துள்ளதுடன், தொடர்ந்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு பழச் செய்கைகளுக்கு ஏதும் தாக்கங்கள்  ஏற்பட்டிருப்பின் அது குறித்து1920
என்ற தொலைபேசி இலக்கம் மற்றும்
 நிறுவனத்தின் 034 2261323 என்ற தொலைபேசி இலக்கங்கம் ஆகியவற்றிட்கு அழைத்து அறிவிக்க முடியும் எனவும்,  பழச்செய்கைகள்  ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, படைப்புழுவினால் ஏற்பட்ட பாதிப்புக்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  விவசாய அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம்,  பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபா வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *