கஹட்டோவிட்டவில் தேர்தல்கள் ஆணையாளர்ருக்கு கௌரவிப்பு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுள்ள அஷ்ஷெய்க் எம்.எம். முஹம்மத் நளீமியை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (27) கஹட்டோவிட்ட அல்பத்ரியா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கஹட்டோவிட்ட சமூக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கௌரவ சலீம் மர்சூப், பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட உயர் மட்ட உறுப்பினர்கள், தேசிய சூரா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் மஸீஹுத்தீன் இனாமுல்லா, அட்டுலுகம அல் கஸ்ஸாலி மத்திய கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஜே.எம். மன்ஸூர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல் மற்றும் தபால் துறை அமைச்சின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். அஷ்ரப், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பள்ளிவாயல்களின் நிருவாக சபை உறுப்பினர்கள், இயக்கங்கள் மற்றும் அமைப்புக்கள் என்பவற்றின் பிரதிநிதிகள் மற்றும் ஊர் புத்திஜீவிகள் உள்ளிட்ட பெரும் திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *