கல்லடிப் பாலத்தில் பாய்ந்து 2 இளைஞர்கள் தற்கொலை!

மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தில் பாய்ந்து இளைஞர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனினும், ஒருவர் பற்றிய விவரமே வெளியாகியுள்ளது.

அவர் கல்முனை, பாண்டிருப்பு, திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்த தனுஷ் (வயது 26) எனத் தெரியவந்துள்ளது.

சியபத்த பினாஷ் கல்முனை கிளையில் அவர் கடமை புரிபவர்.

அவருடன் இன்னும் ஒருவர் கல்லடிப் பாலத்தில் பாய்ந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஆனால், குறித்த நபர் தொடர்பில் தகவல் எதுவும் வெளிவரவில்லை.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இடத்தில் இருவரது மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்கொலை செய்த தனுஷ் தனது நண்பனிடம் தொலைபேசியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கலந்துரையாடியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *