முன்னாள் தளபதிகளுக்கு பீல்ட்மார்ஷல் பதவி? பொன்சேகாவுக்கு ‘செக்’!

முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் றொஷான் குணதிலகவும், கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும், பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விடுதலைப் புலிகளை இல்லாமல் ஒழிப்பதற்கு, ஆற்றிய பங்களிப்புக்காக இவர்களை பீல்ட் மார்ஷலாகப் பதவி உயர்த்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படைத்துறைப் பதவிகளில் மிக உயரியதாக மதிக்கப்படும் பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கும் அதிகாரத்தை முப்படைகளினதும் தளபதியான ஜனாதிபதி கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே, அவர் இறுதிப்போருக்குத் தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கியிருந்தார்.

பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்ச, இந்த உயர் பதவியை ஏற்க மறுத்திருந்தார்.

இலங்கையில் பீல்ட்மார்ஷல் பதவியை வகிக்கும் ஒரே தளபதி பொன்சேக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில்  முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவும், விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *