இனவெறி பிடித்த பேச்சுக்கு மன்னிப்புக் கேட்ட அகமது!

டர்பனில் நடந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது, பாகிஸ்தான் அணியின் தலைவரும் விக்கெட் காப்பாளருமான சர்ப்ராஸ் அகமது, எதிரணி வீரர் பெலக்வாயோவை இனவெறியுடன் விமர்சனம் செய்தார்.

அவரை நோக்கி சர்ப்ராஸ் அகமது,

“ஏய் கறுப்பு வீரரே. இன்று உங்கள் அம்மா எங்கு இருக்கிறார். உனக்காக அவர் என்ன பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்” என்று கூறி சீண்டினார்.

இதனால் சர்ச்சை கிளம்பிய நிலையில் தனது பேச்சுக்கு சர்ப்ராஸ் அகமது மன்னிப்புக் கேட்டுள்ளார்.

“விரக்தியில் நான் வெளிப்படுத்திய வார்த்தைகளை யாரும் தவறாக எடுத்து இருந்தால் அதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்குக் கிடையாது. எனது வார்த்தைகளை எதிரணி வீரர்களோ, கிரிக்கெட் இரசிகர்களோ புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் நான் பேசவில்லை” என்று சர்ப்ராஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *