அணை உடைந்ததில் 50 பேர் பலி ! 300 பேர் காணாமல்போயுள்ளனர்
பிரேசில் நாட்டில் இரும்பு தாது சுரங்க வளாகத்தில் உள்ள அணை ஒன்று உடைந்ததில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளது.
பிரேசில் நாட்டின் பெலோ ஹாரிசன்டே நகருக்கு தென்மேற்கே புருமடின்ஹோ என்ற இடத்தில் இரும்பு தாதுக்களுக்கான சுரங்கம் ஒன்று அமைந்து உள்ளது. இங்கு பயன்படுத்தப்படாத நிலையில் அணை ஒன்று இருந்து வந்துள்ளது.

இதில், டிராக்டர்கள், வீடுகள் மற்றும் பாலங்கள் மண்ணில் புதைந்து போயுள்ளன. ஹெலிகாப்டர்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. இதுவரை 100க்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
இந்த சம்பவத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். 150 பேரை காணவில்லை என முதற்கட்ட தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து சமீபத்தில் அதிபராக பொறுப்பேற்ற ஜெயிர் பொல்சனாரோ தலைமையிலான புதிய அரசு பேரிடர் நிவாரண பணிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.
இந்த நிலையில் அணை உடைந்ததில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.