அரசியல் களத்தில் குதிக்கின்றார் கஸ்தூரி!

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்பு அடைந்தபோது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர்.

சமூகவலைத் தளங்களில் பரபரப்பாக இருக்கும் கஸ்தூரி அரசியலில் நுழைய இருக்கிறார்.

இதுபற்றி கஸ்தூரி கூறும்போது,

“அரசியலில் என் பாதை மகாகவி பாரதியாரின் வழியில் இருக்கும். கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு ஒரு இலட்சம் ரூபா அறிவித்துள்ளது.

குறைந்த செலவில் வீடு கட்டி தருபவர்களுக்கு இது சரியான வாய்ப்பு.

கஜா புயல் நிவாரண பணிகளில் என்னுடன் ரஜினி மக்கள் மன்றம், கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் ஆகியோர் கட்சி பாகுபாடு பார்க்காமல் உதவிகள் செய்தனர்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *