8 படையினரை சுட்டுக்கொன்ற 2 முன்னாள் போராளிகளுக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறை!

வில்பத்து சரணாலயத்தில், 8 படையினரைக் கொன்றார்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2007 மார்ச் 9ஆம் திகதி, வில்பத்து சரணாலயத்தில் பாதுகாப்பு சோதனைக்காகச் சென்றிருந்த கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஜெயந்த சுரவீர மற்றும் 7 படையினர், விடுதலைப் புலிகளின் தாக்குதலில் மரணமாகினர்.

இந்தத் தாக்குதலில் பங்கேற்றவர்கள் எனப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவர் கைதுசெய்யப்பட்டு அனுராதபுர மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

உதயன் எனப்படும் சூரியகாந்தன் ஜெயச்சந்திரன், இளையவன் எனப்பம், சிவப்பிரகாசம் சீலன் ஆகிய முன்னாள் போராளிகள் இருவர் மீதும், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 9 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அவற்றில் 5 குற்றச்சாட்டுகளை, அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, இரண்டு பேருக்கும் தலா 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக சிறையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *