71 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகிறது இலங்கை! விசேட அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி பங்கேற்பு!!

இலங்கையின் 71 ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

இதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என உள்நாட்டவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுதந்திர தினக் கொண்டாட்டம் காலிமுகத்திடலில் இடம்பெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

மாலைதீவு ஜனாதிபதியும் அவரது பாரியாரும் விசேட அதிதிகளாகப் பங்கேற்பார்கள் என அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்தார்.

சுதந்திர கொண்டாட்ட பிரதான நிகழ்வில் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்பார்கள்.

பெப்ரவரி 3ஆம் திகதி இரவு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பிரித் பாராயணம் இடம்பெறும். பிரதான வைபவத்துடன் இணைந்ததாக மாவட்ட மட்டத்திலும் சுதந்திர கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன என்றும் செயலாளர் கமல் பத்மசிறி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *