டயகமவில் 150 தனிவீடுகள் கையளிப்பு!

டயகம தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 150 தனிவீடுகள் அடங்கிய “ஆபிரஹாம் சிங்ஹோ” என்ற புதிய கிராமம் பாவனையாளர்களிடம் இன்று கையளிக்கப்பட்டதுடன், காணி உறுதிப்பத்திரமும் வழங்கப்பட்டது.

இந்திய அரசின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாகவே மேற்படி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில், இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர், கண்டி உதவி உயர்ஸ்தானிகர், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக,

விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இவ்வீடுகள் ஏழு பேர்ச்சஸ் காணியில் 505 சதுரஅடி பரப்பு கொண்ட 2 அறைகள், வரவேற்பறை, குளியறை மற்றும் சமையலறை போன்ற வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் 150 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடுகளுக்கு

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்மைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 20 மில்லியன் செலவில் மின்சாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளும் குடிநீர் வசதிகளும் இவ்வீடமைப்பு திட்டத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

க.கிசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *