‘செல்பி’ சாத்தானால் ஸ்பெயினில் சர்ச்சை!

ஸ்பெயினின் செகோவியா நகரில் வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள சாத்தானின் சிலை மிகவும் கேளிக்கையாக தோன்றுவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

நகரத்தின் கால்வாய் பாலத்தின் கட்டடத்திற்குள் சாத்தான் ஏமாற்றி புகுந்துவிட்டதாக கூறும் உள்ளூர் புராணக்கதைக்கு மரியாதை கொடுக்கும் வகையில் இந்த வெண்கல சிலை உருவாக்கப்பட்டது.

ஆனால், புன்னகை பூத்துக்கொண்டு, திறன்பேசியை பயன்படுத்தி சுயப்படம் (செல்ஃபி) எடுத்துக்கொள்ளும் இந்த சாத்தான் சிலை மிகவும் நட்பார்ந்த ரீதியில் தோன்றுவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

தன்னுடைய கலை வேலைபாட்டுக்கு வந்துள்ள விமர்சனங்களால் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இதனை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார்.

இது கிறிஸ்தவர்களுக்கு எதிராக உள்ளதா என்பதை ஆராய்வதற்காக இந்த கலைப்படைப்பை நீதிபதி ஒருவர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *