2018 இல் 5 இலட்சம் கடவுச்சீட்டுகள் விநியோகம்!

குடிவரவு குடியகல்வு திணைக்களம் கடந்த வருடத்தில் ஐந்து இலட்சம் கடவுச்சீட்டுகளை விநியோகித்துள்ளது.

இந்த வருடத்தில் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை தரம்மிக்கதாக மேம்படுத்தி, இலத்திரணியல் கடவுச்சீட்டாக விநியோகிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக,
குடிவரவு குடியகல்வுத்  திணைக்களக்  கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார் .
இந்தக்  கடவுச்சீட்டைத்  தயாரிப்பதற்காக,  தற்போது கேள்வி மனு கோரப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் நடுப்பகுதியில் இந்த இலத்திரணியல் கடவுச்சீட்டை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அனைத்து நாடுகளுக்குமான வெளிநாட்டு கடவுச்சீட்டு மாத்திரமே விநியோகிக்கப்படுவதாக ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரை,  மத்திய கிழக்கு நாடுகளுக்காக மாத்திரம் விநியோகிக்கப்பட்ட கடவுச்சீட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும்,  தம்பதீப யாத்திரைக்கும் இந்தியா மற்றும் நேபாள யாத்திரைக்கும் மாத்திரம் விநியோகிக்கும் கடவுச்சீட்டு  தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக, குடிவரவு குடியகல்வுத்  திணைக்களக்  கட்டுப்பாட்டாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *