சவேந்திர சில்வாவுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் போர்க்கொடி!

இலங்கை இராணுவத்தின் 53 ஆவது  தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளன.

போர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு,  உயர்பதவி வழங்குவதானது பொறுப்புக்கூறும் கடப்பாட்டை மீறும் செயலாகும் எனவும்  சுட்டிக்காட்டியுள்ளன.

” புதிய இராணுவ பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வா வெளிநாட்டுக்கு பயணிப்பாராயின், பயணிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர் கைது செய்யப்படுவார்” என மனித உரிமை செயற்பட்டாளர் யஸ்மின் சூக்கா எச்சரித்துள்ளார்.

சர்வதேச உண்மைக்கும் நீதிக்கான அமைப்பின் தலைவராகவும் இவர் செயற்படுகின்றார்.

முக்கிய போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவை இராணுவ பிரதானியாக நியமிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அதிர்ச்சியளிக்கக்கூடிய  செயற்பாடு என்றும் விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதியின் இச்செயல் போரில் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிப்பதோடு, நல்லிணக்க செயற்பாடுகளையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா.வின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ  மூனால் நியமிக்கப்பட்ட

மூவரடங்கிய நிபுணர் குழுவில்,  யஸ்மின் சூக்காவும் இடம்பெற்றிருந்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *