ஒரு இனம் இன்னுமொரு இனத்தை அடக்கி ஆளக்கூடாது!

ஒரு இனம் மற்றுமொரு இனத்தை அடக்கி ஓடுக்கி மிதித்து ஆள முற்படக்கூடாது. நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும் இக்கோட்பாடு பொருந்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று அறிவித்தார்.

அரசியலமைப்பு நிர்ணயச்சபை பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடியது.

புதிய அரசியலமைப்புக்கான  நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபையில் முன்வைத்தார்.

அதன்பின்னர் உரையாற்றிய எதிர்க்கட்சித்தலைவர்,

புதிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு இந்த நாடாளுமன்றம் ஏற்புடையதல்ல. அரசியலமைப்பை கொண்டுவரும் தரப்பு கடந்த உள்ளாட்சிசபைத் தேர்தலில் தோல்வியை சந்தித்தது.

எனவே, இதுவிடயத்தில் மக்களின்நிலைப்பாடு என்னவென்பது அறியப்படவேண்டும். மாகாணசபைத் தேர்தல் கூட இழுத்தடிக்கப்பட்டுவருகின்றது. எனவே, புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய சூழ்நிலை இது கிடையாது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்வோம். புதிய அரசமைப்பு தொடர்பில் நீங்கள் உங்கள் தரப்பு யோசனையை முன்வையுங்கள். நாங்கள் எமது தரப்பு யோசனையை முன்வைக்கின்றோம். மக்கள் முடிவெடுக்கட்டும். அதன்பின்னர் நாடாளுமன்றம் ஆராயட்டும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *