மலையகத்தில் தனிவீடுகள் அனைத்துக்கும் காணி உறுதி!

மலையகப் பெருந்தோட்டத்தில் 1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் அமைக்கப்பட்ட அனைத்து தனிவீடுகளுக்கும் விரைவில் முழுமையான காணி உரித்தினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற குழு அறையில் இன்று (11)  நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று எம். திலகராஜ் தெரிவித்தார்.

காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பிரதி அமைச்சர் எட்வர்ட் குணசேகர, பெருந்தோட்ட கைத்தொழில் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ்,

கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருடன் மலைநாட்டு புதிய கிராம மக்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஆகியோருடன்

காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அஅதிகாரிகள் கலந்துகொண்டருந்தனர் .

காலம் சென்ற அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் காலம் முதல் அமைச்சர் பழனி திகாம்பரம் தற்போது அமைத்து வரும் அனைத்து தனி வீடுகளுக்கும் உரிய முழுமையான காணி உறுதியை பெற்றுக் கொடுக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *