‘பேய்’ உடனும் கைக்கோர்ப்பேன் – கறுப்பு சட்டைக்காரர்கள் எங்கே? தொண்டாவுக்கு திகா ‘பிறந்தநாள் அடி’!

”தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக ‘பேய்’ உடனும் கைக்கோர்ப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்.” – என்று அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அமைச்சர் பழனி  திகாம்பரத்தின்  52ஆவது  பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

”  தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை பெற்று தருவதாக ஆசை காட்டிய கருப்புசட்டைகாரர்கள் , இன்னும் ஓரிரு நாட்களில் வெறும் 620 ரூபாயை அடிப்படை சம்பளமாகஏற்று கையொப்பமிட தயாராகிவருகின்றனர்.

இவ்வாறு காட்டிக் கொடுப்பார்கள் என்று தெரிந்தே , பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட வேண்டாம் தொழிலுக்கு செல்லுங்கள் என தொழிலாளர்களிடம் அன்று நான் கோரிக்கை விடுத்தேன்.

இம்முறை தொழிலாளர்கள் ஏமாற்றப்படக்கூடாது. அரசியல் மற்றும் கொள்கை ரீதியில் முரண்பாடுகள் இருந்தாலும் தொழிலாளர்களுக்காக இணைந்து  செயற்பட, அழுத்தங்களை பிரயோக்கிக்க நாம் தயார்.

முதன் முறையாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜியினால் சம்பள உயர்வு தொடர்பில் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தூள்ளார்.

எனக்கு உள்ள அமைச்சு பதவியை துறந்துவிட்டு தயராக உள்ளேன். அதேவேளையில் கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியே வாருங்கள் ஒருமித்து போராடுவோம் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுப்போம்.” எனவும் அவர் கூறினார்.

க.கிசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *