பொருளாதாரப் பிரச்சினைகளையும் வென்றெடுப்போம்!

“நாட்டில் 51 நாட்கள் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்காவிட்டால் கடன் சுமைகளைப் பெரும்பாலும் குறைத்திருப்போம்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

“ஜனநாயகத்தை வென்றது போல பொருளாதாரப் பிரச்சினைகளையும் வென்றெடுப்போம். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வரவு – செலவுத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம்” எனவும் அவர் உறுதியளித்தார்.

நாட்டில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவரும் ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்த இந்தியா உதவி செய்யவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பெரும் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ள நாட்டைக் கட்டியெழுப்பும் வகையில் இந்திய மத்திய வங்கி 400 மில்லியன் டொலர் நிதியை இலங்கைக்கு வழங்கவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் சதியால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு முன்பிருந்த நிலையிலும் உன்னத இடத்துக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு தங்களுடையது எனத் தெரிவித்த பிரதமர், ஆனால் அது அவ்வளவு இலகுவான விடயமல்ல .

ஐக்கிய தேசிய முன்னணி, 2015 ஆம் ஆண்டில் ஆட்சியை பொறுப்பேற்கும்போது, நாடு கடன் பொறிக்குள் சிக்கியிருந்தது. அதிலிருந்து தற்போது மீண்டுவருகின்றோம். எனினும், இவ்வருடத்தில் பல பொருளாதார சவால்கள் காத்திருக்கின்றன.

2019 ஆம் ஆண்டில் செலுத்தி வேண்டிய மொத்தக் கடனின் பெறுமதி (வட்டி அடங்கலாக) 5 ஆயிரத்து 900 அமெரிக்க டொலர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையானது தற்போதைய அரசால் பெறப்பட்ட கடன் அல்ல.

அதேபோல், ஜனவரி மாதம் 14 ஆம் திகதி 2 ஆயிரத்து 600 அமெரிக்க டொலர்களை கடனுக்காக செலுத்த வேண்டியுள்ளது. இலங்கை வரலாற்றில் செலுத்தப்படும் அதிகூடிய கடன் தொகை இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *