வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மூன்றாம் கட்ட நிதியுதவித் திட்டம்….!

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் வெளிநாட்டு வாழ் உறவுகளால் வெள்ள அனர்த்தப் பேரழிவுக்கு வழங்கப்பட்ட நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகள் சார்பாக வளர்மதி சனசமூக நிலையத்தினரால் மூன்றாம் கட்டமாக நேற்று வழங்கப்பட்டது.

கடந்த வெள்ளப் பேரழிவால் முல்லைத்தீவு மாவட்டத்தில் வீடுகள் முற்றாக சேதமடைந்த 86 குடும்பத்தினருக்கும் ரூபா 5,000 படி நிதியுதவி (ரூ. 430000/=) வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வானது நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் ம .பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் லிங்கேஸ்வரன், உதவித் திடடப் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக அதிகாரி, வளர்மதி நிர்வாகக் குழுவினர், சனசமூக நிலையத்தின் உப அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *