‘எனது இதயம் திருடு போய் விட்டது’ – இளைஞரின் முறைப்பாட்டால் திணறிய பொலிஸார்!
‘‘ திருடிய இதயத்தை கண்டுபிடித்து தாருங்கள்’’ என இளைஞர் ஒருவர், பொலிஸில் முறைப்பாடுசெய்ய வந்த ருசிகர சம்பவம் தமிழகத்தின் நாக்பூரில் நடந்துள்ளது.

கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 82 லட்சம் மதிப்புள்ள பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாக்பூர் காவல் ஆணையர் பூஷன் குமார் உபத்யாய், இந்த விசித்தர சம்பவம் பற்றி கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:- திருடப்பட்ட பொருட்களை நாங்கள் கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைத்து விடுகிறோம். ஆனால், எங்களால் தீர்வே காண முடியாத சில புகார்களையும் நாங்கள் பெற வேண்டியுள்ளது.
அண்மையில், நாக்பூரைச்சேர்ந்த ஒரு இளைஞர் தனது இதயத்தை பெண் ஒருவர் திருடிவிட்டதாக கூறி உள்ளூர் காவல் நிலையம் ஒன்றில் புகார் கொடுக்க வந்துள்ளார்.
அவரது புகாரைக்கேட்டு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்த போலீசார், உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர்.
இதையடுத்து, புகார் அளிக்க வந்த இளைஞரிடம் இந்த புகாரை பதிவு செய்வதற்கு இந்திய சட்டத்தில் எந்த உட்பிரிவும் இல்லை எனக்கூறிவிட்டு, இந்த பிரச்சினைக்கு எங்களிடம் தீர்வு இல்லை. திரும்பிச்செல்லுங்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்” என்றார்.