திருகோணமலையில் அமெரிக்க கடற்படை முகாம் ! சபையில் வினா தொடுத்தார் விமல்!

திருகோணமலையில் அமெரிக்க கடற்படை தளமொன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளதா என்று விமல்வீரவன்ஸ எம்.பி. சபையில் இன்று ( 08) கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றம் இன்று (08) செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுதாக்கல் உட்பட தினப்பணிகள் முடிவடைந்தப்பின்னர், இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்டத்தின்கீழ் கட்டளைகள்மீதான விவாதத்தை வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ எம்.பி.,

” அமெரிக்க கடற்படைக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்குரிய முகாமொன்று கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அமைப்பதற்கு அரசு இணக்கம் வெளியிட்டுள்ளதா, அத்தகையதொரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதா?” என்று வினா எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,

” இது வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புபட்ட விடயமல்ல. பாதுகாப்பு அமைச்சிடம்தான் கேட்க வேண்டும்.” என்றார்.

” வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் இவ்விடயம் குறித்து நீங்கள் அறிந்துவைத்திருக்க வேண்டும்.” என்று விமல் குறிப்பிட்டார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *