பயணிகளுக்கு ஆப்பு வைக்கும் பஸ்களை சுற்றிவளைக்க ‘பொறி’!
பஸ் கட்டணங்கள், நான்கு வீதத்தால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பஸ் கட்டணங்களுக்கு மேலதிகமாக கட்டணங்களை அறவிடும் பஸ்களைச் சுற்றிவளைப்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரச மற்றும் தனியார் பஸ் சேவைகள் அனைத்திற்கும், புதிய பஸ் கட்டணங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டள்ளது.

எவ்வாறாயினும், புதிய பஸ் கட்டணங்கள் திருத்தத்திற்கு அமைய, 965 ரூபாவாகக் காணப்பட்ட அதிகூடிய கட்டணம் 924 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.
எனவே, புதிய பஸ் கட்டணங்களுக்கு மேலதிகமாக, கட்டணங்களை அறவிடும் பஸ்களைச் சுற்றிவளைப்பதற்கான விசேட நடவடிக்கைகள், முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
புதிய பஸ் கட்டணங்கள் திருத்தத்திற்கான அறிவித்தல், அனைத்து பஸ்களிலும் காட்சிப்படுத்தப்படுவது அவசியம் எனவும், இவ்வாறு காட்சிப்படுத்தப்படாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமச்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இதன் பயனை பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில், பஸ், முச்சக்கரவண்டிமற்றும் பாடசாலை வேன் ஆகியவற்றின் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.